search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்: விரைவில் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்: விரைவில் அறிமுகம்

    கூகுள் பிக்சல் 2017 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி பட்ஜெட் விலையில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியாகும் என கூறப்படுகின்றது.
    சான்பிரான்சிஸ்கோ:

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியாக கருதப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போன்களில் சிறப்பான கேமரா, தனிப்பட்ட உதவியாள் மென்பொருளான கூகுள் அசிஸ்டண்ட் மென்பொருள் உள்ளிட்டவற்றை வழங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே.

    இந்நிலையில் அடுத்த தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. வரும் மாதங்களில் வெளியாக இருக்கும் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களிலும் அதிநவீன கேமரா வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இத்துடன் பட்ஜெட் விலையில் கூகுள் பிக்சல் போன் ஒன்றும் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.    

    இத்துடன் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு வெளியான பிக்சல் போன்களிலேயே வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சம் வழங்கப்பட இருந்தது. பின் நேரமின்மை காரணமாக இந்த அம்சம் வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.  

    முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போன்களை விட அதிசிறந்த அம்சங்களும், முந்தைய பிக்சல் பதிப்புகளை விட அதிக விலை நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 83X சிப்செட், இன்டெல் சிப்செட் வழங்கப்படலாம். புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படம் எடுக்க உதவும் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

    பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சிப்செட்கள் சோதிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட முதல் தலைமுறை கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் 2016 இறுதி வரை 3 மில்லியன் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×