search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி S8
    X

    இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி S8

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் சார்ந்த புது தகவல்கள் தெரியவந்துள்ளது.
    சியோல்:

    இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் தெளிவான புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே பலமுறை வெளியான புகைப்படங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இத்துடன் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டது.   

    இம்முறை வெளியாகியிருக்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியான தகவல்களை நிரூபிக்கின்றது. அதன்படி புதிய படத்தில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் மிகப்பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த போனில் சாம்சங் சின்னமும் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது.



    இணையத்தில் லீக் ஆகியிருக்கும் புகைப்படம் புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுவது தெரியவந்திருக்கிறது. இத்துடன் சாதனத்தின் வலது புறத்தில் வன்பொருள் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த பட்டன் பிக்ஸ்பி சேவையை இயக்குவதற்காக வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.   

    சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் திரை வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இத்துடன் 64ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. வழக்கமான 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதி மற்றும் பல்வேறு இதர அக்சஸரீகள் வழங்கப்படும் என்றும் இவற்றை கொண்டு சிறிய ஆண்ட்ராய்டு கணினியாக மாற்றும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    மேலும் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் புதுவித சாம்சங் கியர் விர்ச்சுல் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் கியர் 360 கேமரா உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. மார்ச் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் 5.8 இன்ச் திரை கொண்ட மாடல் இந்திய மதிப்பில் ரூ.58,100 மற்றும் 6.2 இன்ச் திரை கொண்ட மாடல் ரூ.65,400 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. 
    Next Story
    ×