search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி Mi6 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் வெளியாகும் என தகவல்
    X

    சியோமி Mi6 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் வெளியாகும் என தகவல்

    சியோமி நிறுவனத்தின் Mi6 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
    பீஜிங்:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி Mi6 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. சியோமியை பொருத்த வரை இந்த ஆண்டின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 

    இந்நிலையில் சியோமி Mi6 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் வெளியாகும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. முன்னதாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு வந்தது. 

    இதனை தொடர்ந்து Mi6 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகின்றது. இது குறித்து வெளியான தகவல்களில் சியோமி Mi6 ஸ்மார்ட்போன் மூன்று வித மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை உயர் ரக Mi6 ஸ்மார்ட்போனில் OLED QHD டிஸ்ப்ளே, வளைந்த வடிவமைப்பு, குவால்காம் சிப்செட், 64-பிட் குவாட்-கோர் ஸ்னாப்சிராகன் 835 பிராசஸர் மற்றும் 6ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டூயல் கேமரா அமைப்பு மற்றும் 256ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். 

    ஸ்டான்டர்டு மாடல் ஸ்மார்ட்போனில் செராமிக் பாடி வடிவமைப்பு, 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகின்றது. மற்றொரு மாடலில் ஹீலியோ X30 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

    மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் சார்ந்த MIUI 8 யூஸர் இன்டர்பேஸ் வழங்கப்படலாம். இவற்றின் விலை முறையே $437 அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,764, $364 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,792 மற்றும் $294 அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,024 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
    Next Story
    ×