search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா P1 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்
    X

    நோக்கியா P1 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

    நோக்கியாவின் P1 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
    அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இதோடு நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு வருகிறது.  

    அந்த வகையில் நோக்கியா சார்பில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன் நோக்கியா P1 என அழைக்கப்படும் என்றும் இது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா P1 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை எச்எம்டி நிறுவனம் இரண்டு மாடல்களில் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்ட மாடல் 256ஜிபி இன்டெர்னல் மெமரியும், சாதாரண கிளாஸ் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடல் 128ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. 

    நோக்கியாவின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஷார்ப் அக்யோஸ் Xx3 வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் மற்றும் 5.3 இன்ச் IGZO டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. குவால்காம் சிப்செட் உடன் 6ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 22.6 எம்பி பிரைமரி கேமரா, 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, குவிக் சார்ஜ் வசதி மற்றும் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர், IP55/57 சான்று மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.0 இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×