search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி Mi6 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்
    X

    சியோமி Mi6 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்

    சியோமி நிறுவனத்தின் Mi6 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    பீஜிங்:

    இந்த ஆண்டு சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக எதிர்பார்க்கப்படும் Mi6 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணைத்தில் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் Mi6 ஸ்மார்ட்போன் மூன்று மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் விலை குறைவான ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

    மேலும் Mi6 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இவற்றின் விநியோக பணிகள் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. மூன்று மாடல்களில் உருவாக்கப்பட்டு வரும் Mi6 ஸ்மார்ட்போன்களில் ஒன்று மீடியாடெக் ஹீலியோ X30 பிராசஸர், மற்ற இரண்டு மாடல்களில் குவால்காமின் புதிய 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

    சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரியும், Mi6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் மெமரியை கொண்டிருக்கும் என்றும் Mi6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல்-பிரைமரி கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஆண்ட்ராய்டு 7.0 அல்லது 7.1 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த MIUI 9 யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    மேலும் Mi6 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவிக் சார்ஜ் 4.0 வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×