search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹூவாய் P8 லைட் (2017) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது
    X

    ஹூவாய் P8 லைட் (2017) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது

    ஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட P8 லைட் ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது முந்தைய பதிப்பை விட சிறப்பானதாக உள்ளது.
    ஹூவாய் நிறுவனம் P8 லைட் எனும் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் P8 லைட் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலினை ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் P8 லைட் (2017) என அழைக்கப்படுகிறது. 

    ஹூவாய் P8 லைட் (2017) சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, கிரின் 655 ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 3GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நொக்கட் இயங்குதளம் மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க ஏதுவாக P8 லைட் (2017) ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஆட்டோஃபோகஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் 4.1 உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன்  கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட P8 லைட் ஸ்மார்ட்போனினை விட அதிக சக்திவாய்ந்ததாக தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள P8 லைட் (2017) ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.17,300 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஹூவாய் P8 (2017) ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஜெர்மன் சந்தையில் ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது.
    Next Story
    ×