search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் கசிந்த மோட்டோ G5 பிளஸ்: புது தகவல்கள்
    X

    இணையத்தில் கசிந்த மோட்டோ G5 பிளஸ்: புது தகவல்கள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G5 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    பீஜிங்:

    மோட்டோரோலா நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் மோட்டோ G5 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன் படி புதிய ஸ்மார்ட்போன் பார்க்க முன்னதாக வெளியான மோட்டோ X (2017) போன்றே காட்சியளிக்கிறது. மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.26,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் வெளியான தகவல்களில் மோட்டோ G பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 4GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். 

    ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் 3080 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. மோட்டோ G5 போன்று இல்லாமல் இந்த ஸ்மார்ட்போனில் மாட்ஸ் வசதி வழங்கப்படவில்லை. இத்துடன் வட்ட வடிவிலான கேமரா லென்ஸ் மற்றும் மோட்டோ சின்னம் உள்ளிட்டவை வழங்கப்படுவது தெரிகிறது. 

    முன்னதாக புகைப்படம் மற்றும் வீடியோக்களில் வெளியான மோட்டோ X 2017 ஸ்மார்ட்போனில் மோட்டோ Z போன்ற வடிவமைப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இத்துடன் சதுர வடிவிலான கைரேகை ஸ்கேனர், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. புதிய ஸ்மார்ட்போன் குறித்து மோட்டோரோலா சார்பில் எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×