search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி Mi6 புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன
    X

    சியோமி Mi6 புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன

    சியோமி நிறுவனத்தின் புதிய Mi6 ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன் படி தெரியவந்திருக்கும் தகவல்களை இங்கு பார்ப்போம்..
    பீஜிங்:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விரைவில் Mi6 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

    அதன்படி வெளியாகியுள்ள புதிய தகவல்களில் சியோமி Mi6 ஸ்மார்ட்போன் மற்ற ஸ்மார்ட்போன்களை விட அதிவேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில்  குவால்காமின் புதுவரவான ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

    அன் டு டு (AnTuTu) பென்ச்மார்க் தகவல்களின் படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் மூலம் இயங்கும் Mi6 ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் இயக்கும் போது 210, 329 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை ஐபோன் 7 ஸ்மார்ட்போனை விட அதிகம் ஆகும்.

    ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 3T அதிக புள்ளகளை பெற்றுள்ளது. ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் கொண்டு இயங்கும் ஒன்பிளஸ் 3T 163, 578 புள்ளிகளை பெற்றுள்ளது. இதனால் தற்சமயம் வெளியிகிருக்கும் ஸ்மார்ட்போன்களை விட அதிவேகமாக இயங்கும் ஸ்மார்ட்போனாக Mi6 இருக்கும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் Mi6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.5D வளைந்த டிஸ்ப்ளே, ஹோம் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம். ஆண்ட்ராய்டு 7.0 அல்லது 7.1 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த MIUI 9 கொண்டு இயங்கும் என தெரிகிறது. கிட்டதட்ட 6GB அளவு ரேம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.   

    புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 16 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, டூயல் டோன் எல்இடி பிளாஷ் மற்றும் 4 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். புதிய சியோமி Mi6 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மத்தியில் அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×