search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிய நிறத்தில் சியோமி Mi Mix அறிமுகம்: முழு தகவல்கள்
    X

    புதிய நிறத்தில் சியோமி Mi Mix அறிமுகம்: முழு தகவல்கள்

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Mi Mix ஸ்மார்ட்போனினை புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    சான்பிரான்சிஸ்கோ:

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு பெஸல் இல்லாத Mi Mix ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்ட போது கருப்பு நிறத்தில் மட்டும் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. தற்சமயம் சியோமி நிறுவனம் பேர்ல் ஒயிட் (Pearl White) நிறத்தில் இந்த ல்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.  

    சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில் முன்பு வெளியிடப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  

    ரேம் மற்றும் இன்டர்னல் மெமரியை சார்ந்து Mi Mix ஸ்மார்ட்போன்கள் இரு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளன. 4GB ரேம் + 128GB மெமரி கொண்ட மாடல் CNY 3499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,400 மற்றும் 6GB ரேம் + 256GB மெமரி கொண்ட மாடல் CNY 3,999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,316 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போனில் 18 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.  

    டூயல் சிம் கார்டு கொண்ட சியோமி Mi Mix 6.4 இன்ச் 2040x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 4400 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவிக் சார்ஜ் 3.0 அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×