search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
    X

    8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் 8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    அசுஸ் நிறுவனம் புதிய சென்ஃபோன் AR ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் டாங்கோவின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி திட்டத்துடன் 8GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் DayDream விர்ச்சுவல் ரியாலிட்டி மென்பொருளும் வழங்கப்பட்டுள்ளது. அசுஸ் சென்ஃபோன் AR ஸ்மார்ட்போனுடன் அசுஸ் சென்ஃபோன் 3 Zoom ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    புதிய அசுஸ் சென்ஃபோன் AR ஸ்மார்ட்போனில் AR+VR அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை ஸ்கேனர், 5.7 இன்ச் சூப்பர் AMOLED QHD, 1440x2560 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் இருக்க இதில் கூலிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 23 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX318 மாட்யூல், ஆட்டோஃபோகஸ் அமைப்பு, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் அசுஸ் சென்ஃபோன் AR இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    அசுஸ் சென்ஃபோன் 3 Zoom  ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் மற்ற அசுஸ் ஸ்மார்ட்போன்களை போன்று இந்த ஸ்மார்ட்போன் கொண்ட மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.5 இன்ச் ஃபுல்-எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.   

    மெமரியை பொருத்த வரை 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் மெமரியும், 12எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX362 சென்சார் மற்றும் 13எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX214 சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×