search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் 7 போன்றே தயாராகும் ஹெச்டிசி அல்ட்ரா: ஜனவரி 12-ல் வெளியீடு
    X

    ஐபோன் 7 போன்றே தயாராகும் ஹெச்டிசி அல்ட்ரா: ஜனவரி 12-ல் வெளியீடு

    ஹெச்டிசி புதிய ஸ்மார்ட்போன் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.
    தைபே:

    தைவானை சேர்ந்த ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ஜனவரி 12 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் பெயர் உள்ளிட்ட சில தகவல்கள் தெரியவந்துள்ளது. 

    அதன் படி ஹெச்டிசி நிறுவனம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன் ஹெச்டிசி அல்ட்ரா என அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஹெச்டிசி ஓஷன் நோட் என அழைக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹெச்டிசி அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.0 இன்ச் டிஸ்ப்ளே, மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை போன்றே 3.5எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஹெச்டிசி நிறுவனம் மூன்று ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

    ஹெச்டிசி அல்ட்ரா உள்ளிட்ட மூன்று ஸ்மார்ட்போன்களும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா நிறைவுற்று சில நாட்கள் கழித்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஓஷன் நோட் என்கிற அல்ட்ரா ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் நீங்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்ப சத்தத்தை மாற்றியமைத்து கொள்ள முடியும்.
    Next Story
    ×