search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி S7-ல் ஆண்ட்ராய்டு நௌக்கட்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
    X

    சாம்சங் கேலக்ஸி S7-ல் ஆண்ட்ராய்டு நௌக்கட்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    சாம்சங் S7-ல் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.
    சியோல்:

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S7 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    புதிய அப்டேட் மூலம் பேட்டரி, நோட்டிபிகேஷன் சார்ந்த அம்சங்கள் மேம்படுத்தப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை விரிவாக பார்ப்போம்.

    டச்விஸ் யூஸர் இன்டர்ஃபேஸ்:

    புதிய டச்விஸ் அமசம் முன்னதாக வழங்கப்பட்ட பச்சை நிறத்தில் இருந்து ஸ்டாக் ஆண்ட்ராய்டு பதிப்புகளில் வழங்கப்படுவதை போன்ற நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய கேமரா ஆப்:

    புதிய அப்டேட் மூலம் கேமரா ஆப் மாற்றப்படவுள்ளது. இதனால் கேமரா ஆப் பயன்படுத்த சற்றே சிரமமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தும் அழகிய புகைப்படங்களை எடுக்க சில புதிய அம்சங்களும் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது. 

    லாக் ஸ்கிரீன்:

    புதிய S7 ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீன் மாற்றப்பட்டு, சாம்சங் திரும்ப பெற்ற நோட் 7 போனில் வழங்கப்பட்டதை போன்ற லாக் ஸ்கிரீன் வழங்கப்பட இருக்கிறது. இதில் நோட்டிபிகேஷன் மட்டுமில்லாமல் சில அம்சங்களை நேரடியாக நோட்டிபிகேஷனில் இருந்தே பயன்படுத்த வழி செய்யலாம். 

    மல்டி-விண்டோ:

    புதிய மல்டி விண்டோ அம்சம் பல்வேறு செயலிகளுக்கு நீட்டிக்கப்பட்ட உள்ளது. மல்டி விண்டோ அம்சம் முன்னதாக தேர்வு செய்யப்பட்டுள்ள செயலிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

    புதிய பேட்டரி மோட்கள்:

    புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் பேட்டரி சார்ந்த மோட்களை சாம்சங் புதியதாக வழங்கும் என கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் மூலம் பேட்டரி பேக்கப் நேரத்தை நிர்ணயம் செய்ய முடியும்.   
    Next Story
    ×