search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி A (2017) அறிமுகமானது: விரைவில் இந்தியா வருகிறது
    X

    சாம்சங் கேலக்ஸி A (2017) அறிமுகமானது: விரைவில் இந்தியா வருகிறது

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி A (2017) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
    லண்டன்:

    உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி A (2017) ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கேலக்ஸி A3 (2017), கேலக்ஸி A5 (2017) மற்றும் கேலக்ஸி A7 (2017) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை பிப்ரவரி மாதம் ஐரோப்பாவில் துவங்கும் என்றும், ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சிறிய மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போனான கேலக்ஸி A3 (2017) சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 2GB ரேம், 16GB இன்டர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 256GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2350 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 3GB ரேம், 32GB இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 16 எம்பி பிரைமரி மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    கேலக்ஸி A7 (2017) ஸ்மார்ட்போனில் 3600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் 5.7 இன்ச் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளது. இன்று சாம்சங் அறிமுகம் செய்துள்ள மூன்று ஸ்மார்ட்போன்களிலும் IP68 சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவை தூசு மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது. மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

    சாம்சங் கேலக்ஸி A (2017) ஸ்மார்ட்போன்களும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் என்றும், இவற்றின் விற்பனை பிப்ரவரி மாதம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவை ஜனவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×