search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மிகப்பெரிய மாற்றத்துடன் களமிறங்கும் சாம்சங்
    X

    மிகப்பெரிய மாற்றத்துடன் களமிறங்கும் சாம்சங்

    சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படும் புதிய S8 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் சில மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சீயோல்:  

    சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக கருதப்படும் கேலக்ஸி S8 பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதன் படி புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் கூடுதலாக S பேனா ஸ்டைலஸ் மற்றும் எக்சைனோஸ் 8895 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் சில பட்டன்கள் நீக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

    ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தின் தகவல்களின் படி புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் பட்டன்கள் நீக்கப்பட்டு, அனைத்தும் மென்மையான பட்டன்கள் மற்றும் 3டி டச் அம்சங்கள் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதிகம் மாற்றக்கூடிய அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் கைரேகை ஸ்கேனர் சாதனத்தின் பேக் பேனலில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    5.0 இன்ச் அல்லது 6.0 இன்ச் என இருவித டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் மற்றும் 6.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் வெளியாகி பின் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து 6.0 இன்ச் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் கூடுதலாக S பேனா மற்றும் ஸ்டைலஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கலாம். 

    நீண்ட காலமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் பிரெஷர்-சென்சிட்டிவ் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற அம்சம் வழங்கப்படுவது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதே போல் முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 8GB ரேம் மற்றும் சமீபத்தில் வெளியான ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    எக்சைனோஸ் சார்ந்த 8895 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படும் நிலையில் புதிய சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×