search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்திய சந்தையில் எச்பி ZBook மேம்படுத்தப்பட்ட லேப்டாப்கள் அறிமுகம்
    X

    இந்திய சந்தையில் எச்பி ZBook மேம்படுத்தப்பட்ட லேப்டாப்கள் அறிமுகம்

    எச்பி நிறுவனத்தின் ZBook மாடல்களில் மேம்படுத்தப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, ZBook 17, ZBook 15, ZBook ஸ்டூடியோ G4 மற்றும் ZBook 14u சாதனங்களின் விரிவான அம்சங்களை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    எச்பி நிறுவனம் தனது ZBook மாடல் லேப்டாப்களில் நான்கு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ZBook 17, ZBook 15, ZBook ஸ்டூடியோ G4 மற்றும் ZBook 14u என நான்கு மாடல்களின் அதிகபட்ச விலை 1519 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.97,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ZBook 17 மாடலில் 17.3 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் Xeon அல்லது கோர் சிபியு, மற்றும் GPU-வை மாற்றியமைக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதில் குவாட்ரோ P4000 அல்லது குவாட்ரோ P5000 பொறுத்திக் கொள்ளலாம். இவை விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை நொடிக்கு 90 ஃபிரேம் (90fps) என்ற வேகத்தில் இயக்கும் திறன் கொண்டுள்ளது. எச்பி ZBook 17 விலை 1519 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.97,550 முதல் துவங்குகிறது.  
     
    எச்பி ZBook 15 G4 சிறப்பம்சங்களை பொருத்த வரை 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் இன்டெல் கோர் i5 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி ஹார்டு டிரைவ் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 1,419 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.91,128 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில்AMD GPU,அல்லது Nvidia பொறுத்தும் வசதியும், மெமரியை 3TB (3000 ஜிபி) வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 





    எச்பி ZBook ஸ்டூடியோ G4-இல் 15.6-இன்ச் 4K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே 16.5 மணி நேர பேட்டரி பேக்கப், இன்டெல் Xeon அல்லது கோர் சிபியு வசதி மற்றும் 2TB (2000 ஜிபி) ஹார்டு டிரைவ் வசதியுடன் இதன் விலை 1,399 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.89,844 விலையில் துவங்குகிறது. 

    எச்பி ZBook 14u 14.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, AMD ஃபயர்ப்ரோ GPU, 2ஜிபி அளவு கிராஃபிக்ஸ் மெமரி மற்றும் 2TB (2000 ஜிபி) மெமரி வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. கடந்த மாதம் எச்பி புதிய வகை எலைட் டெஸ்க்டாப்களை வெளியிட்டது. எலைட் டெஸ்க் 800 சீரிஸ் டெஸ்க்டாப் மற்றும் எலைட்ஒன் 800 AIO என இவை அழைக்கப்படுகின்றன.
    Next Story
    ×