search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதுவரவு: சான்டிஸ்க் பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டு அறிமுகம்
    X

    புதுவரவு: சான்டிஸ்க் பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டு அறிமுகம்

    சான்டிஸ்க் நிறுவனம் புதிய-ரக பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டு சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இவற்றின் விற்பனை தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிளாஷ் தொழில்நுட்பத்திற்கான அடுத்தக்கட்ட சாதனங்களை சான்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி எக்ஸ்ட்ரீம் ப்ரோ மற்றும் எக்ஸ்ட்ரீம் கோ யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் மற்றும் சான்டிஸ்க் அல்ட்ரா 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

    எக்ஸ்ட்ரீம் ப்ரோ 128 ஜிபி மாடல் விலை ரூ.8,490, 256 ஜிபி மாடல் ரூ.13,990, எக்ஸ்ட்ரீம் கோ 64 ஜிபி விலை ரூ.3,990, 128 ஜிபி ரூ.5,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சான்டிஸ்க் அல்ட்ரா 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனங்கள் ஆன்லைனில் அமேசான் தளத்திலும், தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும் விற்பனை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரு மாடல்களில் கிடைக்கும் புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் கோ யுஎஸ்பி 3.1 முறையே நொடிக்கு 200 எம்பி மற்றும் 150 எம்பி வேகத்தில் தகவுகளை பரிமாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் எக்ஸ்ட்ரீம் ப்ரோ யுஎஸ்பி 3.1 128 மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது. இவை முறையே நொடிக்கு 420 எம்பி மற்றும் 380 எம்பி வேகத்தில் தரவுகளை பரிமாற்றம் செய்யும் வல்லமை கொண்டவையாகும்.
    Next Story
    ×