search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒரே விழாவில் இரண்டு நிகழ்ச்சிகள்: ஆப்பிள் பலே திட்டம்?
    X

    ஒரே விழாவில் இரண்டு நிகழ்ச்சிகள்: ஆப்பிள் பலே திட்டம்?

    ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபேட் சாதனங்கள் மிக விரைவில் அறிமுகம் மற்றும் இவற்றின் அறிமுக தேதி உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனங்கள் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபேட் சாதனங்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது. 

    ஏப்ரல் 4 ஆம் தேதி வரை 12.9 இன்ச் கொண்ட ஐபேட் ப்ரோ சாதனம் விற்பனைக்கு வராது என்ற தகவலை தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் 12.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் ப்ரோ விற்பனைக்கு இருப்பு இல்லை என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.      

    நடைபெற இருப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக விழா, மிகவும் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் புத்தம் புதிய ஆப்பிள் வளாகத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ்கள் விரைவில் ஆப்பிள் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



    புதிய ஐபேட்களை பொருத்த வரை 10.5 இன்ச் ஐபேட் ஒன்றும் புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் 9.7 இன்ச் ஐபேட் ப்ரோ உள்ளிட்டவை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களிலும் இரண்டு அல்லது மூன்று ஐபேட்கள் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆப்பிளின் 9.7 இன்ச் ஐபேட் ப்ரோவிற்கான பாகங்களை இரண்டாம் நிலை விநியோகஸ்தர்களும், எல்இடி மாட்யூல்களை கொரியாவை சேர்ந்த நிறுவனமும் விநியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. 10.5 இன்ச் அல்லது 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ சாதனத்தில் A10X பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் ஐபேட் மாடல் ஆப்பிளின் A9 சிப் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

    தற்சமயம் கிடைத்துள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் பார்க் 2 வளாகத்தின் துவக்க நிகழ்ச்சி மற்றும் ஐபேட் ப்ரோ அறிமுகம் என ஒரே விழாவில் இரண்டு நிகழ்ச்சிகளை ஆப்பிள் நடத்தலாம்.
    Next Story
    ×