search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    லெனோவோ புதுவரவு: பட்ஜெட் விலையில் புதிய நோட்புக் அறிமுகம்
    X

    லெனோவோ புதுவரவு: பட்ஜெட் விலையில் புதிய நோட்புக் அறிமுகம்

    லெனோவோ நிறுவனத்தின் புதிய நோட்புக் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லெனோவோ யோகா 520 மற்றும் யோகா 720 மற்றும் Miix 320 லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    பார்சிலோனா:

    இரண்டு யோகா நோட்புக்களிலும் ஏழாம் தலைமுறை இன்டெல் சிப்செட் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. லெனோவோ யோகா 720 மாடலில் 13.0 இன்ச் மற்றும் 15.0 இன்ச் டிஸ்ப்ளே என இருவித அளவுகளில் வழங்கப்படுகிறது. பிளிப் டிஸ்ப்ளே கொண்டுள்ளதால் இவற்றை நோட்புக்கினை நார்மல் மோடு, டெண்ட் மோடு மற்றும் டேப்லெட் மோட்களில் பயன்படுத்த முடியும். 

    15.0 இன்ச் யோகா 720 பிரீமியம் மாடலில் Nvidia GeForce GTX 1050 பிராசஸர் வழங்கப்படுகிறது. 13 இன்ச் மாடலில் இன்டெல் சிபியு மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இரு லேப்டாப்களிலும் 16 ஜிபி ரேம் மற்றும் 1TB HDD அல்லது 512GB எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று தன்டர்போல்ட் போர்ட் வழங்கப்படுகிறது. இதே போர்ட் சார்ஜிங் போர்ட் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதிகளையும் வழங்குகிறது. 

    15.0 இன்ச் மற்றும் 13.0 இன்ச் மாடல்களும் 4K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே கொண்டுள்ளதாகவும் இவை 7 மற்றும் 7 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட மாடலும் கிடைக்கிறது, இதில் 1 மணி நேரம் பேட்டரி கூடுதலாக கிடைக்கும். 



    13.0 இன்ச் லெனோவோ யோகா 720 மாடல் விலை 999 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.71,000, 15.0 இன்ச் 1,099 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.78,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வருகிறது. 

    புதிய யோகா 520 பட்ஜெட் விலையில் 14.0 இன்ச் மற்றும் 15.0 இன்ச் மாடல்களில் கிடைக்கிறது. இதில் 14.0 இன்ச் மாடலில் ஃபுல்எச்டி ரெசல்யூஷனும் 15.0 இன்ச் மாடலில் 4K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. 720 சீரிஸ் போன்றே இதிலும் 16 ஜிபி ரேம் மற்றும் 1TB  HDD அல்லது 512GB எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் மற்றும் புதிய கேபி-லேக் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி, எச்டிஎம்ஐ போர்ட், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 599 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இத்துடன் Miix 320 என்ற பெயரில் புதிய நோட்புக்கினை அறிமுகம் செய்துள்ளது. 10.1 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் Atom X5 பிராசஸர் மற்றும் இன்டெல் எச்டி கிராபிக்ஸ் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 269 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ. 19,000 என்றும் எல்டிஇ கொண்ட மாடல் விலை 399 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×