search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவின் முதல் வளைந்த கேமிங் மானிட்டர் அறிமுகம்
    X

    இந்தியாவின் முதல் வளைந்த கேமிங் மானிட்டர் அறிமுகம்

    சாம்சங் நிறுவனம் இந்தியாவின் முதல் வளைந்த கேமிங் மானிட்டர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கேமர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முதல் வளைந்த கேமிங் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. 1800 எம்எம் ஆரம் கொண்டுள்ள இந்த மானிட்டர் கேமர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த மானிட்டரில் 144Hz ரீபிரெஷ் ரேட், 1 ms ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.   

    கேமர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சாம்சங் மானிட்டர்கள் LC24FG70 மற்றும் LC27FG70 என பெயரிடப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட மோஷன் பிளர் ரிடக்ஷன் தொழில்நுட்பம் மற்றும் VA பேனல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இவை சிறப்பான வீடியோ அனுபவத்தை ஒவ்வொரு விதமான ஃபிரேம்களிலும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரு மாடல்களிலும் AMD FreeSync தொழில்நுட்பம் சார்ந்த HDMI வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரையின் ரீபிரெஷ் ரேட் AMD கிராஃபிக்ஸ் கார்டுகளுடன் இணைந்து சிறப்பான அனுபவத்தை வழங்கும். இத்துடன் இதன் கனெக்டிவிட்டி படங்கள் உடைவதை நிறுத்தி, எவ்வித தடங்களும் இன்றி காட்சிகளை பிரதிபலிக்கும்.  

    சாம்சங் இன் வளைந்த மானிட்டர் LC24FG70 மற்றும் LC27FG70 இந்தியாவில் ரூ.35,000 மற்றும் ரூ.42,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×