search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சோனி Z6 டேப்லெட்: விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி
    X

    சோனி Z6 டேப்லெட்: விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி

    சோனி நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    டோக்கியோ:

    சோனி நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை, விரைவில் துவங்க இருக்கும் சர்வதேச விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் சாதனங்களை சற்றே தாமதமாக வெளியிட சோனி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. 

    கடந்த ஆண்டின் இறுதியில் சோனி நிறுவனம் Z5 சாதனத்தை வெளியிட்டது. இந்நிலையில் அந்நிறுவனம் Z6 சாதனத்தை விரைவில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் சோனியின் புதிய ஃபிளாக்‌ஷிப் சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.    

    சோனி புதிய டேப்லெட் சாதனம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.  

    சிறப்பம்சங்களை பொருத்த வரை சோனி எக்ஸ்பீரியா Z6 டேப்லெட்டில் முந்தைய பதிப்புகளை விட அதிநவீன உயர் ரக அம்சங்கள் வழங்கப்படும். மேலும் பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்பீரியா போன்களை போன்று இந்த டேப்லெட்டிலும் அதிநவீன கேமரா வழங்கப்படும் என கூறப்படுகின்றது. 

    விலையை பொருத்தவரை வழக்கமான சோனி சாதனங்களை போன்றே இதன் விலையும் அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. தற்சமயம் சோனி Z4 டேப்லெட் 670 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,472 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

    சோனியின் புதிய Z6 டேப்லெட் விலை 785 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,277 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    Next Story
    ×