search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் ஐபேட் வெளியீடு மேலும் தாமதமாகலாம்
    X

    ஆப்பிள் ஐபேட் வெளியீடு மேலும் தாமதமாகலாம்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனங்களின் வெளியீடு மேலும் தாமதமாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. இந்நிலையில் புதிய ஐபேட் சாதனங்களின் வெளியீடு தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஐபேட் சாதனங்கள் 10.5 இன்ச் அல்லது 10.9 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 

    தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் ஐபேட் சாதனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இதுவரை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஐபேட் சாதனங்கள் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதோடு அனைவரும் வாங்கக் கூடிய விலையில் 9.7 இன்ச் திரை கொண்ட ஐபேட் சாதனத்தை ஆப்பிள் வெளியிடலாம் என கூறப்படுகின்றது. இத்துடன் 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் திரை கொண்ட மாடல்களை வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது. தற்சமயம் வரை திட்டமிடப்பட்டு வரும் நிலையில் மூன்று மாடல்களும் வெளியிடப்படுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

    ஆப்பிளின் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களுக்கான பாகங்கள் இரண்டாம் நிலை விநியோகஸ்தர்களும், எல்இடி மாட்யூல்களை கொரியாவை சேர்ந்த நிறுவனமும் விநியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. 10.5 இன்ச் அல்லது 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ சாதனத்தில் A10X பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் ஐபேட் மாடல் ஆப்பிளின் A9 சிப் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.    

    புதிய ஐபேட்களின் தயாரிப்பு பணிகள் இம்மாதமே துவங்குவதாக கூறப்பட்டது. இதோடு புதிய ஐபேட் 9.7 இன்ச் அளவு கொண்ட ஐபேட் ப்ரோ போன்று இருக்கும் என கூறப்படுகின்றது.
    Next Story
    ×