search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசுஸ் R558UQ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
    X

    அசுஸ் R558UQ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

    அசுஸ் நிறுவனத்தின் புதிய R558UQ லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அசுஸ் நிறுவனம் தனது நோட்புக் சாதனங்களுடன் புதிய R558UQ லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது 2016, ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட R558 மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும். புதிய R558UQ இரண்டு மாடல்கள் அதாவது கோர் i7 மற்றும் கோர் i5 பிராசஸர்கள் கொண்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.59,990 மற்றும் ரூ.48,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    அசுஸ் R558 போன்றே புதிய R558UQ மாடலிலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், GeForce 940MX கிராஃபிக்ஸ், 2GB DDR3 ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் VGA வெப்கேமரா, 1000GB ஹார்டு டிரைவ், எஸ்டி கார்டு ரீடர் மற்றும் யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி 3.0 மற்றும் யுஎஸ்பி 3.1 டைப்-சி வழங்கப்பட்டுள்ளது. 

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை அசுஸ் R558UQ லேப்டாப் 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, முன்பு குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று 2.7 ஜிகாஹெர்ட்ஸ் கோர் i7-7500U பிராசஸர் மற்றொன்று 2.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i5-7200U பிராசஸர் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 620யும் i7 பிராசஸர் கொண்ட லேப்டாப்பில் 8GB DDR4 ரேம் மற்றும் i5 பிராசஸர் கொண்ட லேப்டாப்பில் 4GB DDr4 ரேம் வழங்கப்படுகிறது. 

    அசுஸ் R558UQ லேப்டாப்பில் 2-cell 38Whr லி-அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதன் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வைபை 802.11ac, ப்ளூடூத் 4.0, ஈத்தர்நெட் ஜாக், எச்டிஎம்ஐ மற்றும் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அசுஸ் R558UQ சிக்லெட் கீபோர்டு மற்றும் அசுஸ் ஸ்மார்ட் ஜெஸ்ட்யூர் வழங்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×