search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சர்வதேச சந்தையில் சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப்கள் அறிமுகம்
    X

    சர்வதேச சந்தையில் சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப்கள் அறிமுகம்

    சாமசங் நிறுவனத்தின் புதிய கேமிங் லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோட்புக் ஒடிசி என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்களின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
    சான்பிரான்சிஸ்கோ:

    சாமசங் நிறுவனத்தின் லேப்டாப் வகைகளில் புதிய கேமிங் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோட்புக் ஒடிசி என அழைக்கப்படும் இந்த லேப்டாப்கள் இரண்டு வித மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நோட்புக் ஒடிசி 15 மற்றும் ஒடிசி 17 என பெயரிடப்பட்டுள்ளது.  

    அதன் படி சாம்சங் ஒடிசி 15 லேப்டாப்பில் 15.6 இன்ச் திரையும் உயர் ரக ஒடிசி 17 லேப்டாப்பில் 17.3 இன்ச் திரையும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு திரைகளிலும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-கிளேர் சர்ஃபேஸ், மற்றும் எல்இடி லேடென் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    சாம்சங் நோட்புக் ஒடிசி 15 மற்றும் ஒடிசி 17 லேப்டாப்களும் இன்டெல் கோர் i7 பிராசஸர் கொண்டுள்ளன. ஒடிசி 15 லேப்டாப்பில் 32GB அளவு கொண்ட DDR4  ரேம் மற்றும் 256GB SSD மற்றும் 1000GB  ஹார்டு டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் கிராஃபிக்ஸ் திறன்களை பொருத்த வரை  GTX 1050 GPU வழங்கப்பட்டுள்ளது. 

    ஒடிசி 17 லேப்டாப்பில் ஒடிசி 15 மாடலை விட இருமடங்கு மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் கிராஃபிக்ஸ் குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும்  GTX 1070 GPU அல்லது GTX 1080 GPU வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சாம்சங் ஒடிசி 15 லேப்டாப்பில் 43 Wh பேட்டரி, 2.5 கிலோ எடை கொண்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் யுஎஸ்பி, ஹெச்டிஎம்ஐ மற்றும் லேன் இன்புட் (Lan Input) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒடிசி 17 லேப்டாப்பில் 93 Wh பேட்டரியும் 3.8 கிலோ எடை கொண்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

    சாம்சங் அறிமுகம் செய்துள்ள இரண்டு லேப்டாப்களின் விலை மற்றும் சரியான விற்பனை தேதி உள்ளிட்டவை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 
    Next Story
    ×