search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டெல் 2 இன் 1 லேப்டாப் அறிமுகம்
    X

    டெல் 2 இன் 1 லேப்டாப் அறிமுகம்

    டெல் நிறுவனத்தின் புதிய வகை லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
    சான்பிரான்சிஸ்கோ:

    டெல் நிறுவனம் புதிய 2 இன் 1 லேப்டாப்களை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில் உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் கீபோர்டு கேஸ் வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் வகை WiTricity காந்த அதிர்வு வயர்லெஸ் சார்ஜிங் திறன் மற்றும் WiGig டாக்கிங் வசதி கொண்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை டெல் Latitude 7285 லேப்டாப்பில் 12.0 இன்ச் 2880x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்டெல் Kaby Lake சிப்செட் மற்றும் 8GB / 16GB ரேம் கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 512GB மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் Hello வசதியுடன் IR கேமராவும் வழங்கப்படுகிறது.  

    புதிய 2 இன் 1 லேப்டாப் ஆனது டேப்லெட் மோடில் 6 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் கீபோர்டு கேஸ் இணைக்கப்பட்டால் 9 மணி நேர பேக்கப் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல் நிறுவனம் இரண்டு வகை கீபோர்டு பேஸ்களை வழங்கியுள்ளது. ஒன்று அதிக செயல்திறன் கொண்டதாகவும் மற்றொன்று பயணத்திற்கான கீபோர்டு ஆகும்.    

    டெல் நிறுவனம் மற்றும் ஓர் 2 இன் 1 லேப்டாப்பினை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் Latitude 5285 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் அதிக சக்திவாய்ந்ததாகவும், நாள் முழுக்க நீடிக்கும் ஒன்றாகவும் இருக்கும். விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கும் டெல் Latitude 5285 லேப்டாப் 12.3 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    டெல் Latitude 5285 லேப்டாப் 7th-gen Intel Core சிப்செட், 16GB ரேம்,  256GB  M.2 SATA SSD உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் கேமராவில் 8 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.0, மைக்ரோ எஸ்டி மற்றும் சிம் கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×