Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
தலைவாசல் >> RSS ஓடை
RSS ஓடை
   
செய்திகள்  
 
தலைப்புச்செய்திகள்
 
 
தேசியச்செய்திகள்
 
 
உலகச்செய்திகள்
 
 
மாநிலச்செய்திகள்
 
 மாவட்டச்செய்திகள்  
  
சென்னை
  
திருப்பூர்
  
சிவகங்கை
  
விருதுநகர்
  
கோவை
  
சேலம்
  
தஞ்சாவூர்
  
திருநெல்வேலி
  
திருச்சி
  
தூத்துக்குடி
  
திண்டுக்கல்
  
மதுரை
  
வேலூர்
  
காஞ்சிபுரம்
  
நாமக்கல்
  
கடலூர்
  
திருவாரூர்
  
புதுச்சேரி
  
ஈரோடு
  
கன்னியாகுமரி
  
திருவண்ணாமலை
  
நீலகிரி
  
பெரம்பலூர்
  
நாகப்பட்டினம்
  
இராமநாதபுரம்
  
திருவள்ளூர்
  
தர்மபுரி
  
விழுப்புரம்
  
கரூர்
  
புதுக்கோட்டை
  
தேனி
  
கிருஷ்ணகிரி
  
அரியலூர்
 
விளையாட்டுச்செய்திகள்
 
 
காலச் சுவடுகள்
 
சினிமா  
 
விமர்சனம்
 
 
வெள்ளித்திரையில் டாப் திரைப்படங்கள்
 
 
முன்னோட்டம்
 
 
சினிமா செய்திகள்
 
 
கிசுகிசு
 
 காட்சியகம் 
  
நடிகை
  
நடிகர்
  
திரைப்படம்
  
நிகழ்வுகள்
 
சினிமா 2014
 
ஆன்மிகம்  
 
முக்கிய விரதங்கள்
 
 
ஜோதிடம்
 
 
கோவில்கள்
 
 
ஸ்லோகங்கள்
 
 
தோஷ பரிகாரங்கள்
 
 
வழிபாடு
 
 
இந்த வார விசேஷங்கள்
 
 
திருப்பாவை
 
ஆரோக்கியம்  
 
உடற்பயிற்சி
 
 
ஆரோக்கிய சமையல்
 
 
இயற்கை அழகு
 
 
பொது மருத்துவம்
 
 
பெண்கள் மருத்துவம்
 
 
பெண்கள் பாதுகாப்பு
 
வீடியோ  
 
டிரைலர்கள்
 
 
சினி நிகழ்வுகள்
 
 
சிறப்பு வீடியோ
 
 
சினிமினி
 
 
கோலிவுட் கபே
 

RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பாவிக்கப்படுகின்றன. இதை ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும். இந்த செஞ்சதுரம் காணப்படும் இணையதளங்களில் இம்மாதிரி வசதி கிட்டும். அவையன்றி வலைப் பூக்களிலும் (Blogs) இந்தமாதிரி வசதிகள் உள்ளன.

மாலை மலர் முகப்பு பக்கத்தில் உள்ள பதிவை அவ்வப்போது வாசிப்பதற்கும் மற்றும் உலகில் நடக்கும் விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுவதற்க்கும் இந்த RSS வசதியைப் பயன்படுத்தலாம். மேலும் கூகிள் வலைப்பூக்களில் (google Blogs) இடம்பெறும் புதிய செய்திகளை உடனுக்குடன் வாசிப்பதற்கும் இந்த வசதி மிகவும் இலகுவானது.

RSS என்பது xml கோப்பின் அடிப்படையில் அமைந்த ஒரு பொருளடக்கப் பட்டியல். ஆக்கத்தின் அடிப்படை விடயங்களான தலைப்பு, எழுதியவர், நேரம் மற்றும் எதைப் பற்றியது என்ற சிறு குறிப்புகளை அடங்கியது. அவ்வப்போது கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவதற்காக ஏற்பட்ட முறையே இந்த Rss. இப்பொழுது அனேகமாக வலைப்பூக்களிலும் பல இணைய தளங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. xml இன் ஒரு வகையான RDF கட்டமைபைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கபடுவதால் RDF Site Summary என்றும், எளிதாக செய்திகளை பரிமாறிக் கொள்வதால் Really Simple Syndication என்றும் மொத்ததில் RSS என்றும் அழைக்கப்படுகின்றது.

RSS வசதியை நாம் பாவிப்பதால் உடனுக்குடன் செய்திகளைப் பெறுவது மட்டுமல்ல. ஒரே இடத்திலிருந்து நீங்கள் விரும்பும் தளங்களை அணுக முடியும். இந்த RSS ஊட்டுக்களைப் படித்து அவற்றில் பொதிந்திருக்கும் செய்திகளைத் தரவும் இணைய தளங்களை அங்கிருந்து அணுகவும் உதவும் செயலிகள் நிறைய இருக்கின்றன. அவை இலவசமாகவே கிடைக்கின்றன. இணைய தளத்தில் செயல்படும் செயலிகளும் தனித்து உங்கள் கணினியிலேயே செயல்படும் செயலிகளும் இருக்கின்றன. வலைப்பூக்கள் சாதாரண இணைய தளம் போலல்லாமல் xml கட்டமைப்புடன் தரவுகள் சேமிக்கப்பட்டு பின்னர் பக்கங்களாக வெளிக்காட்டப்படுவதால் அடிப்படையிலேயே RSS ஊட்டுகளை தர இயலுகின்றது.

RSS படிப்பான்கள் (Rss Reader)

RSS ஊட்டுக்களைப் படிப்பதற்கு நிறைய செயலிகள் இணையத்தில் இயங்குபவனவாகவும் தனித்து இயங்குபவனவாகவும் இருக்கின்றன. வெப்தளங்களில் இயங்கும் கூகிள் படிப்பான் (google Reader) போன்ற நூற்றுக்கணக்கான RSS படிப்பான்கள் நிறையவே இருக்கின்றன. நீங்கள் படிக்க விரும்பும் செய்தித் தலைப்புக்களின் RSS முகவரியை இட்டால் அங்கிருந்தே செய்திகளின் தளத்திற்குச் சென்று முழுவதையும் படிக்கலாம்.

Image comes here

RSS என்று பொதுவாகச் சொன்னாலும் அவற்றிலும் வித்தியாமான நிர்ணயம் உண்டு. 0.9, 1.0, 2.0 மற்றும் புதியதாக வந்திருக்கும் atom போன்றவை xml கோப்பின் அடிப்படையிலே இயங்குகின்றன. என்றாலும் சில வேறுபாடுகள் உண்டு, இப்போது கிடைக்கும் படிப்பான்கள் எல்லா வகைகளையும் கையாளுபவையாக இருகின்றன. தனித்தியங்கும் RSS படிப்பான்களும் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன. RssReader மற்றும் RssBandit போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

Rss Bandit

RSS ஊட்டுக்களைக் கொடுக்கும் தளங்களை அறிந்து கொள்ளுவதற்கு அந்தந்த தளங்களுக்குச் செல்லும்போது மேலே கூறியதுபோல் செஞ்சதுரங்களைக் கொண்டோ அல்லது அதற்கான சுட்டிகளுடன் கொண்ட அறிவிப்பைக் கொண்டோ தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் பெரும்பாலான படிப்பான்களில் (RSS Reader) வலைத்தளதின் முகவரியைக் கொடுத்தாலே அங்கு RSS வசதி இருக்கிறதா என்று கண்டறிந்து RSS சுட்டியை தன்னுள் சேர்த்துக்கொள்ளும்.

வரலாறு:

முதலில் Rss ஓடையை தொடங்கி வைத்த பெருமை நெட்ஸ்கேப்பையே (Netscape) சாரும். UserLand என்ற நிறுவனம் இதைக் கையிலெடுத்துகொண்டது. இப்போது செய்தி பரிமாற்றங்களில் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. RSS வகையில் பல இருக்கின்றன. என்றாலும் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கலாம். பொதுவாக எல்லாமே RSS என்று அழைக்கப்பட்டாலும் RSS 1.0 என்ற வகை சற்று வித்தியாசமானது. xml இன் துணை அமைப்பான RDF என்ற வகையைச் சார்ந்தது. இதன் அமைப்பு சற்று சிக்கலாக இருக்கும். இந்த முறை RDF Site Summary (RSS) என்று அழைக்கப்படுகிறது (Rich Site Summary என்று அழைக்கப் படுவதும் உண்டு எப்படியானும் RSS மாறப் போவதில்லை). RSS 0.91, 0.92, 2.0 ஆகியவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இப்பொழுது இவையே பெரும்பாலோரால் பயன்படுத்தப் படுகின்றன.

Rss ஓடை

xml பாவனைக்கு வந்த பின் தகவல் பரிமாற்றத்தில் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. இதன் சிறப்புக் குணங்களில் முக்கியமானது, சாதாரணமாக நாங்கள் பாவிக்கும் உரை வடிவிலேயே (text format) தரவுகளை பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் சில விதிகளைக் கடைபிடிக்கவேண்டும். உரை வடிவில் இருப்பதால் கையால் எழுதுவது சுலபமாக இருந்தாலும் விதிகள் மீறப்படமல் இருப்பது அவசியம்.


Note: **Dear Readers please note that the RSS feeds provided in our sites are only for personal consumption and these should not be used for business or replicating purpose of our content. Violation of these terms will be liable for legal action**
Get our toolbar!
AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif
DT-Next-160x600.jpg