search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து டிகே என ரோகித் கிண்டாலாக கூறினார்.
    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 35 பந்தில் 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை மே 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பாக தேர்வு குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கை பார்த்து ரோகித், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து டிகே என கிண்டாலாக கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த போட்டி மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்து விட்டது என நினைத்த நிலையில் தனி ஒருவனாக நின்று ஆட்டத்தை மாற்றினார். இருந்தாலும் அந்த போட்டியில் ஆர்சிபி தோல்வியை தழுவியது. ஆனாலும் அவரது ஆட்டம் அனைவரின் மனதில் இடம் பிடித்தது.

    ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:- உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என எம்எஸ் டோனியை சமாதானப்படுத்துவது கடினமாக இருக்கும். தினேஷ் கார்த்திக்கை சமாதானப்படுத்துவது எளிதாக இருக்கும் என ரோகித் கூறினார்.

    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.
    • இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்த கருத்து ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    நாங்கள் இதுவரை சந்திக்கவே இல்லை. நானோ அல்லது ராகுல் அல்லது அஜித்தோ அல்லது பிசிசிஐயின் யாரோ ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை நீங்கள் கேட்காத வரையில், எதையும் நம்பவேண்டாம். அதேபோல உலகக்கோப்பையில் நானும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்குவது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது.
    • இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் உள்ளன.

    இந்த புள்ளி பட்டியலில் பலம் வாய்ந்த அணியான மும்பை 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 4-ல் தோல்வியடைந்துள்ளது. நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சக வீரராக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக் விதிமுறையில் தனக்கு உடன்பாடு இல்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்பேக்ட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. கிரிக்கெட் போட்டி என்பது 11 வீரர்களை கொண்டதே தவிர 12 வீரர்களை உள்ளடக்கியது அல்ல. ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது. இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    புதுடெல்லி:

    சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் மான்யூவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 4-11, 9-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீஜா அகுலா, உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான சீனாவின் ஷென் மெங்குடன் மோதினார்.

    இதில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகிய இருவருமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளனர்.

    • இது போன்று 89 ரன் மட்டுமே எடுக்கும்போது, இரட்டை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம்.
    • இந்த தோல்வியை மறந்து வலுவாக மீண்டு வருவது அவசியம்.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மல்லுக்கட்டியது. இதில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் குஜராத்தை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் விருத்திமான் சஹா (2 ரன்), கேப்டன் சுப்மன் கில் (8 ரன்) டெல்லியின் வேகத்தில் அடங்கினர். இந்த வீழ்ச்சியில் இருந்து குஜராத்தால் மீள முடியவில்லை. சாய் சுதர்சன் (12 ரன்), டேவிட் மில்லர் (2 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை. மிடில் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் கைவரிசை காட்டி மேலும் சிதைத்தனர்.

    இந்த ஆட்டத்திற்குரிய ஆடுகளம் (பிட்ச்) இந்த சீசனில் இதற்கு முன்பு பயன்படுத்தப்படவில்லை. இதனால் அதை துல்லியமாக கணிக்க முடியாமல் குஜராத் பேட்டர்கள் திகைத்து போனார்கள். விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன.

    பின்வரிசையில் ராகுல் திவேதியா (10 ரன்), ரஷித்கான் (31 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) என வெளியேறினார். இதனால் 17.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த குஜராத் 89 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் ஒரு அணி 100 ரன்னுக்குள் முடங்கியது இதுவே முதல்முறையாகும். டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாக் பிரேசர் மெக்குர்க் 20 ரன்னும், ஷாய் ஹோப் 19 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 16 ரன்னும் எடுத்தனர். விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 3-வது வெற்றியை ருசித்த டெல்லி அணி புள்ளிபட்டியலில் 9-ல் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது. குஜராத்துக்கு 4-வது தோல்வியாகும்.

    தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. ஆடுகளம் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. எங்களது சில விக்கெட்டுகளை பார்த்தால், ஆடுகளத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது தெரியும்.

    மோசமான ஷாட் தேர்வே விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்வேன். இது போன்று 89 ரன் மட்டுமே எடுக்கும்போது, இரட்டை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். இந்த தோல்வியை மறந்து வலுவாக மீண்டு வருவது அவசியம். இந்த சீசனில் முதல் பாதி முடிந்துள்ளது. நாங்கள் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். முந்தைய ஆண்டுகளை போன்று பிற்பாதியில் மேலும் 5-6 ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.

    டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், 'நிறைய விஷயங்கள் எனக்கு திருப்தி அளிக்கிறது. எங்களது சிறந்த பந்து வீச்சில் இதுவும் ஒன்று. ஆனாலும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது' என்றார்.

    • கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
    • பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் (61 மற்றும் 89-வது நிமிடம்) அடித்தார்.

    பார்சிலோனா:

    கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் ஒவ்வொரு கால்இறுதியும் இரண்டு ஆட்டங்களை கொண்டது. இதில் பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்) பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) இடையிலான கால்இறுதியின் முதலாவது சுற்றில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 2-வது கால்இறுதி சுற்று பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ரொனால்டு அராவ் ஜோ சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பி.எஸ்.ஜி. அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் (61 மற்றும் 89-வது நிமிடம்) அடித்தார்.

    இரண்டு கால்இறுதி சுற்றில் அடித்த கோல்களின் அடிப்படையில் பி.எஸ்.ஜி. 6-4 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. 2021-ம்ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள பி.எஸ்.ஜி. அணி அடுத்து போரஸ்சியா டார்ட்மன்ட் (ஜெர்மனி) கிளப்பை சந்திக்கிறது.

    • இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    முல்லாப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (டெல்லி, குஜராத் அணிக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம்) தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மைதானமான முல்லாப்பூரில் நடந்த முந்தைய 2 ஆட்டங்களில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

    பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் முழு உடல் தகுதியை எட்ட குறைந்தது ஒரு வாரம் பிடிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும். கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் கவனிப்பார்.

    பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா அதிரடியாக செயல்பட்டு அசத்துகிறார்கள். ஆனால் பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா போதிய பங்களிப்பை அளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், ரபடா, ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.

    5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்த 2 ஆட்டங்களில் (டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றது. ஆனால் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. 207 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் (105 ரன்) அடித்த போதிலும், மற்ற வீரர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா நல்ல நிலையில் உள்ளனர். நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் வாணவேடிக்கை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு மெச்சும் வகையில் இல்லை. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. ஜெரால்டு கோட்ஜீ, ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டியது முக்கியமாகும். ரோகித் சர்மாவுக்கு இது 250-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதன் மூலம் டோனிக்கு (256 ஆட்டம்) அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.

    தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருக்கும் இவ்விரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன.

    இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். மேலும் இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்து வீசி 2 ஸ்டெம்புகளை உடைத்தார். அந்த நேரத்தில் அது தொடர்பான வீடியோ, புகைப்படம் வைரலானது. அதற்கு இந்த போட்டியில் மும்பை அணி பழிதீர்க்குமா என மும்பை அணி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: அதர்வா டெய்ட் அல்லது பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஷசாங்க் சிங், லியாம் லிவிங்ஸ்டன், அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

    மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.
    • சந்தீப் வாரியர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கல் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது.

    குறைந்த இலக்கை துரத்திய டெல்லி அணி துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.

    அபிஷேக் பொரெல் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் மோதினார்.

    இதில் டி மினார் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நடால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
    • முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது. 

    • உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
    • அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவு.

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் 20 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்திய அணியின் பேட்டிங் பிரிவில்- ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில்- ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே மற்றும் அக்சர் பட்டேல் இடம்பெறுவர் என தெரிகிறது.

    ஸ்பின்னர்கள் பிரிவில்- குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்று தெரிகிறது. வேகப் பந்துவீச்சாளர் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது. 

    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
    • டெல்லி அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    ×