என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா: பிறந்த குழந்தையை குப்பையில் வீசிய தந்தை - சிசிடிவி கேமராவால் சிக்கினார்
Byமாலை மலர்23 Jan 2018 12:37 AM GMT (Updated: 23 Jan 2018 3:19 AM GMT)
சீனாவில் பிறந்து சிறிது நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #China #Fatherdumpedbaby
பீஜிங்:
சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றது பதிவாகி இருந்தது. அந்த பதிவைக் கொண்டு ஒரு நபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அது தன்னுடைய குழந்தை என்றும் குழந்தை பிறந்தவுடன் ஊதா நிறத்தில் மாறியதால் குழந்தைக்கு கொடிய நோய் இருப்பதாக கருதி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாகவும் கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளிரான சமயத்தில் குழந்தை பிறந்ததால், நிற மாற்றம் ஏற்பட்டதாகவும், மற்றபடி குழந்தை அரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த குழந்தை பின்னர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் குழந்தையை காப்பாற்றிய பெண்மணியை பலர் பாராட்டி வருகின்றனர். #China #Fatherdumpedbaby #NewBorn #CCTVfootage #tamilnews

Next Story
×