search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்ப மறுக்கும் மியான்மர் அகதிகள்
    X

    இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்ப மறுக்கும் மியான்மர் அகதிகள்

    மியான்மரில் இருந்து இந்தியாவிற்கு வந்து தங்கியிருக்கும் அகதிகள் சுமார் 1400 பேர் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.
    அய்சால்:

    மியான்மரில் ராணுவத்திற்கும் அரகான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடும் சண்டை நடந்தது. அரகான் போராளிகளை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. இந்த பதற்றமான சூழ்நிலையில் இந்தியாவின் எல்லையை ஒட்டியுள்ள சின் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள், இந்தியாவிற்கு அகதிகளாக வந்து மிசோரம் மாநிலத்தின் லாங்ட்லாய் மாவட்டத்தில் தங்கியுள்ளனர்.

    தற்போது தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மிசோரம் மாநிலத்தில் தங்கியுள்ள 1400க்கும் மேற்பட்ட அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவர்கள் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.



    இதுபற்றி லாங்ட்லாய் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு லால்சங்லுரா கூறியதாவது:-

    மியான்மரில் கடந்த ஆண்டு அரகான் கிளர்ச்சியாளர்களை ராணுவம் ஒடுக்கியபோது அங்கிருந்து நவம்பர் 25-ம் தேதி 1400-க்கும் மேற்பட்ட மக்கள் தப்பிவந்து அகதிகளாக தங்கியிருக்கின்றனர். தற்போது அங்கு சண்டை முடிவுக்கு வந்துள்ளது. ஒரு மாத காலமாக எந்த துப்பாக்கி சத்தமும் கேட்கவில்லை. இருப்பினும் ராணுவம் மீதான பயம் காரணமாக தங்கள் கிராமங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர். 

    இந்த அகதிகள் அனைவரும் இரண்டு குழுக்களாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் சொந்த ஊர்களில் அமைதி திரும்பியதும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×