search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் இருந்து வீசிய ஏவுகணைகள் துருக்கி எல்லைப்பகுதியை தாக்கின
    X

    சிரியாவில் இருந்து வீசிய ஏவுகணைகள் துருக்கி எல்லைப்பகுதியை தாக்கின

    சிரியாவில் இருந்து அடுத்தடுத்து வீசப்பட்ட நான்கு ஏவுகணைகள் துருக்கி நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள கிலிஸ் நகரை இன்று தாக்கின. #Turkey
    இஸ்தான்புல்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாதின் ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களையும் சில பகுதிகள் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளையும் ஒழிக்க துருக்கி நாட்டு விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்றும், ஐ.எஸ். தீவிரவாதிகளில் ஆதிக்கம் நிறைந்த சிரியாவின் அப்ரின் மாகாணத்தில் துருக்கி நாட்டு விமானப்படைகள் தாக்குதல் நடத்தின.

    இந்நிலையில், துருக்கி நாட்டின் தெற்கு எல்லைப்பகுதியில் உள்ள கிலிஸ் நகரை குறிவைத்து சிரியாவில் இருந்து இன்று அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகள் வீசப்பட்டன. இவற்றில் மூன்று ஏவுகணைகள் தாக்கியதில் இரு வீடுகள் நாசமடைந்தன. ஒரு ஏவுகணை நகரின் மையப்பகுதியில் காலி நிலத்தில் விழுந்து வெடித்தது என துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக துருக்கி விமானப்படைகளும் ஏவுகணை வீச்சில் ஈடுபட்டதாக பின்னர் சிரியாவில் இருந்துவரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. #Tamilnews
    Next Story
    ×