search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
    X

    ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

    பாகிஸ்தானில் இந்திய உளவாளி என்று மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் எழுப்பிய பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது. #Pakistan#Jadhav'scase#UNSC debate
    நியூயார்க்:

    பாகிஸ்தானில் இந்திய உளவாளி என்று மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் எழுப்பிய பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ஐ.நா.சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் அக்பருதீன் ஆப்கானிஸ்தானின் அண்டைநாடான பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் விவகாரத்திலும், நல்ல தீவிரவாதி, கெட்ட தீவிரவாதி என்று பிரித்துப் பார்க்கும் மனநிலையில் இருந்தும் மாறுபட வேண்டும் என குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பாகிஸ்தான் நிரந்தர தூதர் மலீஹா லோதி, எங்கள் மனநிலையைப் பற்றி பேசுபவர்கள் அவர்கள் நாட்டில் இருந்து உளவுபார்க்க வந்து எங்களிடம் பிடிபட்டுள்ள குல்பூஷன் யாதவ் உள்பட தங்களது சொந்த விவகாரங்களையும் சற்று திரும்பி பார்க்க வேண்டும் என கூறினார்.



    ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் அந்நாட்டுக்கு கிடைத்துவரும் வருமானம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது வெளியில் இருந்து எந்த உதவியும் ஆதரவும் அங்குள்ள தீவிரவாதிகளுக்கு தேவையில்லை.

    வெளியில் உள்ள சக்திகளால் தங்கள் நாட்டில் தீவிரவாதம் தூண்டி விடப்படுவதாக குற்றம்சாட்டும் ஆப்கானிஸ்தான், தங்கள் நாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டுமேயொழிய பழியை பிறநாடுகளின்மீது போட முயற்சிக்க கூடாது என்றும் லோதி கூறினார்.

    அவரது பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹேக்மத் கலீல் கர்சாய், பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் இன்னும் இயங்கி வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் தூதர் தொடர்ந்து பேசினார். ஆனால், அவரது கருத்தை எந்த நாடும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #TamilNews
    Next Story
    ×