search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் இருந்து லெபனான் சென்ற 10 அகதிகள் பனிப்புயலில் சிக்கி உயிரிழப்பு
    X

    சிரியாவில் இருந்து லெபனான் சென்ற 10 அகதிகள் பனிப்புயலில் சிக்கி உயிரிழப்பு

    உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவில் இருந்து லெபனான் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது பனிப்புயலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
    பெய்ரூட்:

    உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் உள்ள பொதுமக்கள் பலர் உயிருக்குப் பயந்து அண்டை நாடான லெபனானுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். 

    அவ்வகையில் சமீபத்தில் சிரியாவில் இருந்து ஒரு குழுவினர் புறப்பட்டு லெபனான் நோக்கி சென்றனர். அவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் சிரியா-லெபனான் இடையே உள்ள பனிமலையைக் கடந்து சென்றபோது பனிப்புயலில் சிக்கிக்கொண்டனர். 



    இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் லெபனான் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பனிப்புயலின்போது கடுங்குளிரைத் தாங்க முடியாமல் 2 குழந்தைகள், 6 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் 10 பேர் இறந்திருப்பதை லெபனான் ராணுவம் கூறியுள்ளது.

    அகதிகளை கடத்த முயன்றதாக சிரியாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மஸ்னா எல்லை அருகே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. #tamilnews
    Next Story
    ×