search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழங்கால டைனோசரின் 180 கிலோ வால்: மெக்சிகோவில் ஏலத்துக்கு வந்தது
    X

    பழங்கால டைனோசரின் 180 கிலோ வால்: மெக்சிகோவில் ஏலத்துக்கு வந்தது

    16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் 180 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட வால் ஒன்று மெக்சிகோவில் நேற்று ஏலத்துக்கு வந்தது.
    மெக்சிகோ சிட்டி:

    லத்தீன் அமெரிக்க நாடுகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கிய இரு நிலநடுக்கங்களால் மெக்சிகோவில் 480 பேர் உயிரிழந்தனர்.

    சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் கடுமையாக சேதமடைந்தன. இவற்றை சீரமைக்க நிதி திரட்டுவதற்காக சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மொராக்கோ நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட 56 அடி நீளமும், 22 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட அரியவகை டைனோசரின் பதப்படுத்தப்பட்ட 4 அடி நீளம்கொண்ட வால் ஒன்றை ஏலத்தில்விட தீர்மானிக்கப்பட்டது.



    இதற்கான குறைந்தபட்ச விலையாக 1.8 மில்லியன் பெசோஸ் (இந்திய மதிப்புக்கு சுமார் ஆறு கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×