search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டு சாலை திட்டத்திற்கு உதவும் வகையில் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தியது சீனா
    X

    பட்டு சாலை திட்டத்திற்கு உதவும் வகையில் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தியது சீனா

    அடுத்த கட்ட பொருளாதார நகர்வின் முக்கிய திட்டமாக கருதப்படும் பட்டு சாலை திட்டத்திற்கு உதவும் வகையில் பெய்டோ-3 என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் சீனா இன்று விண்ணில் வெற்றிகரமான செலுத்தியது.
    பீஜிங்:

    சீனா பி.டி.எஸ். திட்டத்தின் கீழ் பல பெய்டோ-3 வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு மட்டும் 18 வழிகாட்டி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று 26 மற்றும் 27-வது செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளது.

    சிச்சுவான் மாகாணத்தின் ஜியாஸ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து காலை 7:18 க்கு லாங் மார்ச்-3 பி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டது. சீனாவின் மைக்ரோ செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் நிறுவனம் இன்று விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டை வடிவமைத்துள்ளன.

    தனது பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முக்கிய திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ள பட்டு சாலை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சாலைகள், துறைமுகம், ரெயில்வே மற்றும் பல திட்டங்களை சீனாவுடன் இணைக்கும் வகையில் பட்டு சாலை திட்டம் என்ற பெயரில் பல மில்லியன் டாலர் செலவில் சீன அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×