search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை போல் பேசி வருகிறார் டிரம்ப்: பாக். வெளியுறவு துறை மந்திரி கண்டனம்
    X

    இந்தியாவை போல் பேசி வருகிறார் டிரம்ப்: பாக். வெளியுறவு துறை மந்திரி கண்டனம்

    இந்தியாவை போல் பேசி வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி கவாஜா ஆசிப் கண்டனம் தெரிவித்துள்ளார். #pakistan #trump
    இஸ்லாமாபாத்:

    தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன் தனது டுவிட்டரில், கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது. பாக்.,கிற்கு இனி நிதியுதவி கிடைக்காது என குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார்.



    டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது. இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் பாக்.கிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலேவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது வெளியுறவு துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறியதாவது:

    அமெரிக்காவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை. முன்பிருந்தது போலவே உறவை பேணி வருகிறோம். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை போல் தொடர்ந்து பேசி வருகிறார். அமெரிக்க தலைவர்களின் இதுபோன்ற கருத்துக்கள் உண்மைக்கு முரணாக உள்ளன என தெரிவித்துள்ளார். #pakistan #trump #tamilnews
    Next Story
    ×