search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஒருவர் பலி
    X

    ஈரானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஒருவர் பலி

    ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானார். மேலு 50-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    டெஹ்ரானில் இருந்து மேற்கு திசையில் சுமார் 51 கி.மீ தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த திடீர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், கட்டிடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற முற்பட்ட வேளையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  57 பேர் காயங்களுக்கு உள்ளாகினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    கடந்த நவம்பர் மாதம் ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்காணோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×