search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானங்களுக்கு தடை விதித்த துனிசியா
    X

    ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானங்களுக்கு தடை விதித்த துனிசியா

    ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானங்கள் நாட்டுக்குள் தரையிறங்க துனிசியா அரசு தடை விதித்துள்ளது.
    துனிஸ்:

    ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானங்கள் நாட்டுக்குள் தரையிறங்க துனிசியா அரசு தடை விதித்துள்ளது.

    கடந்த வாரம் துனிசியா நாட்டை சேர்ந்த பெண்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையவோ, அந்நாட்டின் வழியாக பயணம் செய்யவோ அமீரக அரசு தற்காலிகமாக தடை விதித்தது. ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானங்கள் தங்கள் நாட்டில் தரையிறங்க துனிசியா அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    ஐக்கிய அரபு அமீரமும் இந்த தடை குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×