search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் அமைதி திட்டத்தை ஏற்க மாட்டோம்: பாலஸ்தீன அதிபர் அறிவிப்பு
    X

    அமெரிக்காவின் அமைதி திட்டத்தை ஏற்க மாட்டோம்: பாலஸ்தீன அதிபர் அறிவிப்பு

    நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளும் அமெரிக்கா அமைதி நடவடிக்கையில் மத்தியஸ்தராக இருக்கும் தகுதியை இழந்து விட்டது என பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
    பாரிஸ்:

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான மோதல்களை தடுத்து நிறுத்தி நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் அமைதி திட்டம் ஒன்றை உருவாக்கி வருகின்றன.

    அவ்வகையில், அமெரிக்கா தயாரித்துவரும் அமைதி திட்டம் வரும் 2018-ம் ஆண்டில் இரு நாடுகளிடம் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக பல்வேறு தலைவர்களை சந்தித்து அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோரை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானை இன்று பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் பாரிஸ் நகரில் சந்தித்தார். 

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையில் அமைதியை உருவாக்குவதற்காக பெரும் பங்காற்றிவரும் எம்மானுவேல் மேக்ரானை பாராட்டினார். 

    நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளும் அமெரிக்கா அமைதி நடவடிக்கையில் மத்தியஸ்தராக இருக்கும் தகுதியை இழந்து விட்டது என்பதால் அமெரிக்கா தயாரிக்கும் அமைதி திட்டத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
    Next Story
    ×