search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா: வெளிநாட்டு பணியாளர்களின் துணைவர்களுக்கான விசாவிலும் கைவைக்கும் டிரம்ப்
    X

    அமெரிக்கா: வெளிநாட்டு பணியாளர்களின் துணைவர்களுக்கான விசாவிலும் கைவைக்கும் டிரம்ப்

    H-1B விசாவுடன் அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிநுட்ப பணியாளர்களின் மனைவி அல்லது கணவருக்கு அளிக்கப்படும் H-4 ரக விசாக்கள் மீது கடுமையான கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வேலை செய்துவரும் பல வெளிநாட்டு தொழிநுட்ப பணியாளர்கள் H-1B என்னும் சிறப்பு விசாக்களின் மூலம் அங்கு வசித்து வருகின்றனர். பட்ட மேற்படிப்பு பயின்றவர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், மற்றும் இதர தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு H-1B என்னும் இந்த சிறப்பு விசாக்கள் அளிக்கப்படுகின்றன.

    இவர்கள் ஆணாக இருந்தால் அவர்களின் மனைவிகளும், பெண்ணாக இருந்தால் கணவர்களும் H-4 ரக விசாக்கள் மூலம் ‘கிரீன் கார்ட்’ என்னும் தற்காலிக குடியுரிமையுடன் அமெரிக்காவுக்கு சென்று தங்களது துணைவர்களுடன் தங்கி அருகாமையில் கிடைக்கும் தங்களால் இயன்ற வேலைகளை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்க பொருட்களையே வாங்குவோம்; அமெரிக்கர்களையே பணியமர்த்துவோம் என்று கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசாவுடன் அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிநுட்ப பணியாளர்களின் மனைவி அல்லது கணவருக்கு அளிக்கப்படும் H-4  ரக விசாக்கள் மீது கடுமையான கட்டுப்பாடு விதிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திடீர் முடிவினால் கணவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக அமெரிக்காவுக்கு வரும் 90 சதவீத பெண்களுக்கு, குறிப்பாக இந்திய பெண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக, கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட விசா சட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டில் இதுபோன்ற H-4  விசா மூலம் அமெரிக்காவுக்கு சென்ற 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், டிரம்ப்பின் இந்த திடீர் முடிவால் இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×