search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: தேசிய துயரம் என பிரதமர் வருத்தம்
    X

    ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: தேசிய துயரம் என பிரதமர் வருத்தம்

    ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாலியல் வன்செயல்களில் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது ஒரு தேசிய துயரம் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து 5 ஆண்டுகளாக அரசின் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    இந்த விசாரணையில், அங்குள்ள தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றில் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

    2013-ம் ஆண்டில் இருந்து எழுந்த 2 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நிறுவனங்களில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளன என்று விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், எத்தனை பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்ற உண்மையான எண்ணிக்கை எங்களுக்கு தெரியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விசாரணை ஆணையத்தை தொடர்புகொண்டு தகவல்கள் அளித்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த கதியை விவரித்துள்ளனர்.



    இதையடுத்து விசாரணை ஆணையம், 400 பரிந்துரைகளை செய்துள்ளது.

    இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், “ ஒரு தேசிய துயரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

    ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாலியல் வன்செயல்களில் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது பெற்றோர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×