search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லாத இந்தியா: தவறான உலக உருண்டை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம்
    X

    காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லாத இந்தியா: தவறான உலக உருண்டை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம்

    இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இல்லாத உலக உருண்டை கனடாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

    டோரண்டோ: 

    அமெரிக்காவில் காஸ்ட்கோ எனப்படும் பன்னாட்டு சில்லரை விற்பனை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமாகும். 1983-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் கிளைகள் அமெரிக்கா, பிரட்டன், கனடா, ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன. 

    இந்நிலையில் கனடாவில் முக்கிய நகரம் ஒன்றில் இந்நிறுவனத்தின் பன்னாட்டு ஷாப்பிங் மாலில் சில்லரை விற்பனை நிலையத்தில் உலக உருண்டை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இல்லாதது போல் உலக வரைபடம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் ‘மேட் இன் சைனா’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்திய வரைபடத்தை சிதைக்கும் வகையில் இருந்த அந்த உலக உருண்டையில் காஷ்மீர் தனி நாடாகவும், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் மீது கனடாவில் வாழும் இந்தியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    அந்த உலக உருண்டையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவிவருகிறது. இதற்கு டுவிட்டரில் இந்தியர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


    Next Story
    ×