search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க வேண்டும்: 57 முஸ்லிம் நாடுகள் வலியுறுத்தல்
    X

    பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க வேண்டும்: 57 முஸ்லிம் நாடுகள் வலியுறுத்தல்

    துருக்கியில் நடந்த முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பில் பங்கேற்ற 51 நாடுகள் பாலஸ்தீனத்தின் தலைநரகம் ஜெருசலேம் என அனைத்து நாடுகளும் அங்கீகரித்து அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.
    இஸ்தான்புல்:

    பாலஸ்தனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என்று அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை.

    இந்த நிலையில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் அரபு நாடுகளில் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.

    இது சம்பந்தமாக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு கூட்டம் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. அதில், 57 முஸ்லிம் நாடுகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

    ஜெருசலேம், பாலஸ்தீனத்தின் தலைநகரம் என அனைத்து நாடுகளும் அங்கீகரித்து அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

    மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா விலகி கொள்ள வேண்டும். இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்தது செல்லாது. அமெரிக்காவின் இந்த முடிவு பாலஸ்தீன மக்களின் உரிமைக்கு எதிராக தாக்குதல் ஆகும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×