search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
    X

    ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

    அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் கையொப்பமிட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையொப்பமிட்டார். மேற்படி தொகையில் 626 பில்லியன் டாலர்களை ராணுவத்தின் அடிப்படை மற்றும் தேசிய பாதுகாப்பு செலவினங்களுக்காகவும், 66 பில்லியன் டாலர்களை கடல்கடந்து பணியாற்றும் அமெரிக்க படைகளில் செயல்பாடுகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தொகையில் 26.2 பில்லியன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவும், போர் கப்பல் கட்டவும், 10.1 பில்லியன் 90 நவீனரக போர் விமானங்கள் வாங்கவும், 2.2 பில்லியன் ராணுவத்துக்கான இதர போர் வாகனங்களை வாங்கவும் ஒதுக்கப்படும்.

    இந்த பட்ஜெட்டின் மூலம் தெற்காசிய கண்டத்தில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு பாராளுமன்றத்தின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த காலத்தில் ராணுவ பட்ஜெட்டில் மிகப்பெரிய வெட்டுகள் விழுந்ததால் நமது படைகளின் தயார்நிலை மற்றும் திறனில் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த பெருந்தொகையை ஒதுக்குவதுடன் மூலம் அமெரிக்காவின் ராணுவத்தின் வல்லமையை முழுமையாக நிலநாட்ட முடியும். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் போரிட்டு நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஈராக்கில் வெற்றி பெற்றுள்ளோம். அவர்கள் மற்ற பகுதிகளில் பரவினர். அவர்கள் பரவும் அதே வேகத்தில் நாமும் வீழ்த்தி வருகிறோம்.

    கடந்த ஆட்சியாளர்களின் காலம் முழுவதும் பெற்ற வெற்றியைவிட ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் நாம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம் என இந்த நிதியை ஒதுக்கி கையொப்பமிட்ட பின்னர் பேசிய டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×