search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தடை - வெனிசூலா அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்
    X

    அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தடை - வெனிசூலா அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்

    அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கருத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    வெனிசூலா நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 3 முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தன. இதையடுத்து இனி வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார்.

    இந்த நிலையில் அங்கு அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் போட்டியிட அதிபர் நிக்கோலஸ் மதுரோ வாய்ப்பு அளிக்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    அது மட்டுமின்றி, இது சர்வாதிகார போக்கை நோக்கி நிக்கோலஸ் மதுரோ செல்வதை காட்டுவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். நிக்கோலஸ் மதுரோவின் இந்த போக்கிற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “அனைத்து மக்களும் போட்டியிட வாய்ப்பு அளித்து, நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைமுறை மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வெனிசூலா மக்களுக்கு தகுதியும், உரிமையும் உள்ளது” என கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×