search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் இந்தியரின் உயிரை காக்க குண்டடி பட்டவருக்கு ‘டைம்’ இதழ் கவுரவம்
    X

    அமெரிக்காவில் இந்தியரின் உயிரை காக்க குண்டடி பட்டவருக்கு ‘டைம்’ இதழ் கவுரவம்

    அமெரிக்காவில் இனவாத தாக்குதலில் பலியான இந்தியர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோல்டாவின் உயிரை காக்க குண்டடி தாக்குதலுக்கு உள்ளான இயான் கிரில்லாடை ‘டைம்’ இதழ் கவுரவித்துள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.

    மும்முரமான ஆட்டத்தின்போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

    ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா

    அவரை காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான இயன் கிரில்லாட்(24) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளி ஆடம் புரின்டன்(51) முன்னாள் கடற்படை வீரர் என பின்னர் தெரியவந்தது.

    ஸ்ரீனிவாசின் உயிரை காக்க தன்னுயிரை துச்சமென கருதிய இயான் கிரில்லாட் ‘2017-ம் ஆண்டில் நமக்கு நம்பிக்கை அளித்த வீரர்கள்’ என பிரபல டைம் இதழ் கவுரவித்துள்ளது. இதே, போல் பல்வேறு துணிச்சலான செயலில் ஈடுபட்ட 4 பேர் இந்த கவுரவ பெயருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, இந்தியன் அமெரிக்கன் சங்கம் சார்பாக இயான் ‘உண்மையான அமெரிக்க ஹீரோ’ என்று கவுரவிக்க பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×