search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெனிசுலா: தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளுக்கு தடை என அதிபர் மதுரோ அறிவிப்பு
    X

    வெனிசுலா: தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளுக்கு தடை என அதிபர் மதுரோ அறிவிப்பு

    வெனிசுலா நாட்டில் நேற்று நடந்த மேயர் தேர்தலை புறக்கணித்த கட்சிகள் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் புதிய அரசியல் சட்டம் உருவாக்குவதற்கான நிர்ணய சபை தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் அதிபர் நிக்கோலஸ் மதுரோ முழு அதிகாரத்தையும் தன் வசமாக்கிக்கொள்ள ஏதுவாக நியாயமற்ற முறையில் நடைபெற்றதாக கூறி அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

    மேலும், அதிபரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அரசியல் நிர்ணய சபை, முழு அதிகாரத்தையும் கொண்டது என அவர் மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். அரசின் மற்ற அனைத்து பிரிவுகளை விட அதிக அதிகாரங்களை அரசியல் நிர்ணய சபை கொண்டுள்ளது எனவும் அவர் அழுத்தமாக கூறினார்.

    இந்நிலையில், அந்நாட்டில் உள்ள 300-க்கும் மேற்பட்ட நகரசபை மேயர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கடந்த அக்டோபர் மாதத்திலேயே ஜஸ்டிஸ் பர்ஸ்ட், பாப்புலர் வில் மற்றும் டெமோக்ராடிக் ஆக்‌ஷன் கட்சிகள் அறிவித்திருந்தன.

    நேற்று நடந்த தேர்தலிலும் இக்கட்சிகள் போட்டியிடவில்லை. அதிபர் நிகோலஸ் மதுரோவின் சோசியலிச கட்சியே இதில் வெல்லும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மேயர் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மட்டுமே அடுத்தாண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், புறக்கணித்த கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அதிபர் மதுரோ நேற்று பேசியுள்ளார்.
    Next Story
    ×