search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    “என் மீது கண் வேண்டாம்” இனவாதத்தை விமர்சித்த பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்
    X

    “என் மீது கண் வேண்டாம்” இனவாதத்தை விமர்சித்த பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்

    அமெரிக்க வெள்ளை இனவாத குழுவின் சில வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மே-க்கு டொனல்ட் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னர் வெள்ளை இனவாத வலதுசாரி குழு மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை இனவாத குழுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    மேலும், இஸ்லாமிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை ஆகியவையும் அவரை இஸ்லாமிய எதிர்ப்பாளராகவே காட்டியது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, தனது வலைதளத்தில் இஸ்லாமியர்கள் மீது அமெரிக்க வெள்ளை இனவாத குழு நடத்தும் சில வன்முறை வீடியோக்களை பகிர்ந்தி அமெரிக்க அரசை விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னை கண்காணிக்க வேண்டாம். இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது கவனம் செலுத்துங்கள், நாங்கள் நல்லதையே செய்கிறோம்” என்று தெரேசா மேவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

    மேலும், பிரிட்டன் வலதுசாரி தலைவரான ப்ரான்சென், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில இஸ்லாமிய வன்முறையாளர்கள் வீடியோவை, டிரம்ப் ரீ- ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தெரேசே மே-வின் செய்தி தொடர்பாளர், “ஒரு நாட்டின் அதிபருக்கு இது அழகல்ல” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×