search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறும்  எரிமலை: 10 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு
    X

    இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறும் எரிமலை: 10 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு

    இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையானது புகையைக் கக்கத் தொடங்கியிருப்பதால், 10 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. இங்குள்ள பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிமலை வெடித்து சிதறும் நிலை உள்ளது.

    எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.

    இந்நிலையில், இந்த எரிமலையின் பாதிப்பு குறித்து இன்று 4-ம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும்போது அதனை சுற்றியுள்ள பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 10 கிமீ சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.



    இரவு நேரத்தில் தீப்பிழம்புகள் காணப்பட்டதால் எந்நேரமும் வெடிக்கும் அபாயம் உள்ளது. எரிமலை வெடிக்கும் சத்தம், மலைச்சிகரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவு வரை கேட்கும் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×