search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்க்கசில் இருந்து தப்பி பாரீஸ் நகரை அச்சுறுத்திய புலி சுட்டுக்கொலை
    X

    சர்க்கசில் இருந்து தப்பி பாரீஸ் நகரை அச்சுறுத்திய புலி சுட்டுக்கொலை

    சர்க்கசில் இருந்து தப்பி பாரீஸ் நகரை அச்சுறுத்திய புலி சுட்டுக் கொல்லப்பட்டது. புலி தப்பி வந்தது குறித்து சர்க்கஸ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற டிசம்பர் 3-ந்தேதி முதல் சர்க்கஸ் நடை பெறுவதாக இருந்தது. அதற்காக சிங்கம், புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வரவழைக்கப்பட்டன. அவற்றில் ஒரு புலி கூண்டில் இருந்து வெளியேறி பாரீஸ் நகருக்குள் புகுந்தது.

    அது பாரீஸ் நகர வீதியில் சுற்றி வலம் வந்தது. இதனால் பொது மக்கள் பீதியும், அச்சமும் அடைந்தனர். டிராம் வண்டிகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வீடுகளை விட்டு பொது மக்கள் வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே தீயணைப்பு படையினர் போலீசார் மற்றும் சர்க்கஸ் ஊழியர்கள் புலியை தேடி வந்தனர்.

    அப்போது தெருவில் பதுங்கியிருந்த புலி சுட்டுக் கொல்லப்பட்டது. புலி தப்பி வந்தது குறித்து சர்க்கஸ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×