search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதலின் ‘மூளை’ ஹபீஸ் சயீத்தை கைது செய்ய வேண்டும்: அமெரிக்கா
    X

    மும்பை தாக்குதலின் ‘மூளை’ ஹபீஸ் சயீத்தை கைது செய்ய வேண்டும்: அமெரிக்கா

    மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கடந்த ஜனவரி மாதம் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறிய பஞ்சாப் மாகாண கோர்ட்டு சயீத்தை விடுவிக்க உத்தரவிட்டது.

    ஐ.நா சபையால் சர்வதேச தீவிரவாத என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, மும்பை தாக்குதலின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

    இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீத்தர் நாவேர்ட் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத்தை கைது செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என கூறியுள்ளார்.
    Next Story
    ×