search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம்: போர் குற்ற வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
    X

    வங்காளதேசம்: போர் குற்ற வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

    வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி 6 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜமாத் இ இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த 6 பேர் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்கள் பலியாக காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் 6 பேருக்கும் மரண தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×